என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

சனி, 29 டிசம்பர், 2012

நானும் எழுதுகிறேன்...





எழுத்துகளை கோர்த்து 
வார்த்தையை முன்னிறுத்தி 
இயன்றவரை 
இருதயத்தில் உள் நுழைந்து 
மெய்யுரைக்கும் எனது எழுத்து...
இன்னும் 
கன்னித் தமிழில் கரை சேரவில்லை..
ஆகவே 
கவிஞன் என்றுரைக்க மனமில்லை..
எனினும் 
ஆர்வத்தில் குறைவில்லை...
முடித்தது 
பள்ளிப் படிப்பை பாதியிலே..
ஆதலால் 
இலக்கணம் இல்லாமலே என் எழுத்து...
கூடியவரை 
நிகழாது எழுத்தில் கருத்துப் பிழை...
என்றும் எண்ணம் 
மொழியையே நினைந்திருக்கும்.. 
கவனம் 
இனத்தையே சார்ந்திருக்கும்...
சுற்றம் 
எடுத்துரைப்பேன் அச்சம் அகற்றி...

இன்றும் என்றும் 
எனக்குண்டான தேடலோடு நானும் எழுதுகிறேன் ...

வியாழன், 27 டிசம்பர், 2012

புத்தாண்டே...


புத்தாண்டே...
வாவென அழைக்கிறேன் உன்னை..

தமிழன் நான் என்ற பொழுதும் 
ஆங்கிலத்தான் அமைத்த 
உன்னை நம்பியே எம் பிழைப்பு...
ஆகவே 
ஆங்கிலப் புத்தாண்டே 
வேறு வழியின்றி அன்புடன் 
அழைக்கிறேன் உன்னை ...
உன்னை குறை கூற ஒன்றுமில்லை...
ஆதித்தமிழன் கண்ட எம்மோழி....
இன்று முளைத்த உனக்கா புரியும்...
எம்மீது பிழையுண்டு....
எம்மொழியும் எம்மினமும் 
வந்தாரை வாழவைத்தே பழகியது....
"முற்றத்து முல்லை மணக்காது"
என்ற மொழிக்கு நீயே சாட்சி...

இனத்தின் விநாசம்......


சுற்றம் சூழலில் 
மனிதம் குறைவே காண
காரணி கண்டிடவே 
இல்லை சமத்துவம் பேண 
இதுவே நிலைத்திட்டால் 
சாகும் நிலைக்கு வந்திடும்...
வீழும் தருணம் தந்திடும்...
அந்தோ பரிதாபம் என 
அயலான் சொல்ல கேட்டிடும்...
இனியொரு யுகம் பிறக்காது ,
காத்திருந்தால் கனி பழுக்காது,
தடியொன்றை எடுத்திடு ,
கனியாத கனியை அடித்திடு...
கை கொண்டு கேட்பின் யாசகம்,
அதுவே நம் இனத்தின் விநாசம்...... 

செவ்வாய், 25 டிசம்பர், 2012

எம் வாழ்வின் கூற்று....

வாழ்நிலையின் 
கடைநிலையை தொட்டுவிட 
முனைந்து விட்டேன்....
இனி நிகழ்வது 
மகத்துவமோ மரணமோ 
அனுபவித்து கொள்ள 
துணிந்து விட்டேன்...
நிகழும் நிகழ்வை 
நிகழ்த்தி விட 
உறக்கத்தை கை விடுவேன்...
இல்லையெனில் நிரந்தர 
உறக்கத்தை கைதொடுவேன்...
இதுவே எம் வாழ்வின் கூற்று....

திங்கள், 24 டிசம்பர், 2012

சந்திக்க சிந்தை கொள்ளாதீர்...


தயவுசெய்து என்னை 
விட்டுவிடுங்கள்....
என்னால் உங்களுக்கு 
ஆகப் போவது ஒன்றுமில்லை...
நான் உங்களை ஒரு பொழுதும் 
சிறப்பிக்க போவதில்லை...
ஆதலால் அச்சமே,
உணர்வில் முதன்மையான  நீ 
தயக்கமேனும்  உன் தோழனை 
அழைத்து செல் என்னைவிட்டு...
அறியாமை அகலும் 
நீவிர் நீங்கும் போது.............
எனது 
சூழ்நிலையே நீ 
உற்பத்தி செய்யும் இடர்களில் 
தன்னம்பிக்கை தவறிப் போகாது,
உன்னையும் வெளிநடப்பு செய்வேன்..
எம்
நெஞ்சில் நஞ்சாய் பதிந்த 
ஏமாற்றத்தின் அடிச் சுவடே 
அகன்று விடு என்னை விட்டு.
இனி எந்நிலையிலும்
எனை சந்திக்க சிந்தை கொள்ளாதீர்...
பொய்களும் புரட்டுகளும் எனை சூழாது 
இனி நிகழப் போவது நிதர்சனம் மட்டுமே...

சமர்ப்பணம்..

துவங்கும் எந்த செயலுக்கும் 
முடிவின் நோக்கம் சமர்ப்பணமே.....
தாயின் தளிர்வு 
பிள்ளைக்கு...
விதையின் வீழ்ச்சி 
விருட்சத்திற்கு..
நதியின் ஓட்டம் 
நற்பயிருக்கு....
எந்த முன்னுரைக்கும் 
முடிவுரை உண்டு....
அது போலத்தான் 
எச்செயலுக்கும் சமர்ப்பணம்,,,
எதிர்பார்ப்பை உள்வைத்து 
சமர்ப்பிக்கும் எச்செயலும் 
ஏமாற்றத்தை உயிர்விக்கும்....


வெள்ளி, 21 டிசம்பர், 2012

பயணம்...


குறுகிய வளைவு 
கரடுமுரடான பாதை 
நான் கடக்க வேண்டிய 
இலக்கு அதிக தொலைவு...
எட்டுவதற்குள் என் 
ஆயுள் முடியுமோ....
இடறிக் கால்கள் 
தவறுமோ...
அஞ்சிக் கைகள் 
நடுங்குமோ...
தனிமை தன்னம்பிக்கையை 
பதறச் செய்யுமோ..
அறியாத நிலையில் 
இலக்கை நோக்கியப் பயணம்...
இதில் 
இலக்கை அடைவேனோ இல்லையோ...
எனதான பயணத்தில் மாற்றம் நிகழாது....

திங்கள், 17 டிசம்பர், 2012

நிழல்



மெய்யுரைக்கும் நம்மின் போலி,,,,
ஒளி நிற்கும் 
எதிர் திசையிலே அவதரித்து 
உருவத்தை உயிர்ப்பிக்கும்....
வண்ணங்களும் வடிவங்களும் 
நிலையல்ல 
எண்ணங்களும் சுற்றங்களும் 
மெய்யல்ல 
என்பதை ஒலியில்லாமல் 
ஒலித்து விட்டு செல்லும்..
பிரகாசத்தில் மட்டுமே 
உலகம் உன்னை அறியும் 
எனும் கூற்றுக்கு நிழலே சாட்சி...
மனிதனின் நிழல் 
ஒளியின் வீழ்ச்சி..
மரத்தின் நிழல் 
உயிர்களின் எழுச்சி....

ஞாயிறு, 16 டிசம்பர், 2012

அச்சம்..

தைரியத்தின் முதல்நிலை...
உயிர்களாய் பிறந்த 
சகலத்திற்கும் 
சொந்தமானது..
தனக்கென்று ஏதும் 
நேராதிருக்கும் 
வரை உள்ளிருக்கும்....
நிகந்த பின்னே வலுவெடுக்கும்...
வீரம் மிஞ்சும் 
நெஞ்சினிலும்...
சிறு துளியாய் நிறைந்திருக்கும்....
அச்சத்தை ஒட்டியே 
ஆலயங்களும் 
ஆராதனைகளும்....
போர்களும் 
அச்சத்தின் அதிகபட்சமே,,,
அஞ்சி நிற்கும் 
நிலையில் மட்டுமே 
மாற்றத்திற்கு 
மாறுதல் கிட்டும்....
அச்சம் இல்லாமை என்பதே 
அச்சம் 
உண்டு என்பதாலேயே,,,,
அச்சத்திற்கு எதிர் வினை வீரமன்று.....

நெருப்பு கவிஞன்


தமிழில் இன்று  சற்றே தடுமாற்றம்
வார்த்தை சேகரிப்பில் முடக்கம்
எத்தனிக்கும் எழுத்துகளில் 
அவனை நினைந்தால் நடுக்கம்....
அவன் எழுத்து வீரியத்தில் 
என் சிந்தனை  வியர்த்து போனது..
தட்டு தடுமாறி அவனை நினைக்கிறேன் 
அவனை புகழ கூட அருகதை இல்லாத தமிழனாய்...
இருப்பினும் 
தலைநிமிர்ந்து சொல்கிறேன் வாழ்த்து
செந்தீயை நெற்றி பொட்டில் வைத்து 
நாவில் கனலை கக்கிய 
எம் ஒப்பில்லா நெருப்பு கவிஞன் 
பாரதியின் பிறந்த நாள் ,,,,,

சனி, 8 டிசம்பர், 2012

தவிப்பு...


உச்சபட்ச எதிர்பார்ப்பின் 
ஒருவிதமான ஏகாந்த நிலை...
நரம்பு மண்டலங்ககளின் இடம் மாற்றம் 
தருணத்தில்  நிகழும்....
இதயத்தின் துடிப்பு  
மூளையை சலவை செய்யும்....
கண்களில் சுரக்கும் நீர் 
அடிபாதத்திலும் சுரந்து 
நடையில் பிறழ செய்யும்...
நினைவில் தங்கிய நிகழ்ந்து போனதை
நிகழப்போகும் நிகழ்வுடன் ஒப்பிட்டு
நிகழாத கற்பனையை 
தருவிக்கும் இந்த தவிப்பு........
மிகைப்பட்ட உணர்ச்சியாய்
உள்மனதின்  கிளர்ச்சியாய் 
வருகையின் வாசலாய் 
இழப்பின் இறுதியாய் 
உருவெடுக்கும்....
நடவாத ஆசையில் உருவெடுப்பதல்ல
முடிவெடுத்த ஆசை நிகழாத போது நிகழும்
தவிப்பு....
தவிக்காத உயிர்கள் உணர்வற்றவையே,,,,

சனி, 24 நவம்பர், 2012

எனது அம்மாவின் பிறந்த நாள் இன்று...


வாழ்த்துகூறி வணங்குவதை விட அவரை பற்றி சிறு குறிப்புகள்...

இதுவரை என் அம்மாவின் வாழ்க்கை குறிப்பே எனது வாழ்க்கை பயணத்தின் கையேடு....

பெண்களுக்கே அரசியாக 'பெண்ணரசி' என்று  'தந்தை பெரியாரால்' பெயர் சூட்டப்பட்டவள்...

வீரத்தில் ஊர் மெச்சிய சின்னதுரைக்கு இளவரசியாக முதற் மகளாய் உதித்தவள்...

கடின பொருளாதாரத்தின் விளிம்பில் கூட எங்களுக்கு பசி என்ற உணர்வை அறிய செய்யாதவள்...

நேர் சிந்தனையும் தளராத தன்னம்பிக்கையையும்  ஒரு பிடி சோற்றில் ஊட்டியவள்...

இன்று வரை தனக்கென்று சிந்திக்காமல் எங்களுக்கு என்றே  சிந்தித்தே தளர்வடைந்தவள்...

பண மூட்டையை சுமக்காமல் புண்ணிய மூட்டையை சுமக்க இன்றளவும் பயிற்சிப்பவள் ..

எந்நிலையிலும் போராட்டத்தையும் போர் குணத்தையும் இளமையிலே என்னில் விதைத்தவள் ...

தலைவர்  பிரபாகரனை நேரில் கண்டு இன்று வரை அவர் மீதான பக்திக்கு வழிவகுத்தவள் ...

இன்னும் சொல்ல சங்கதிகள் உண்டு பல ,, அடங்காது சொல்லில் அவளது வாழ்க்கை...

எந்தன் வாழ்நாள் சாதனையாளர் வரிசையில் அம்மாவுக்கே முதலிடம்... 

அவளே எப்பிறவியிலும் எனது அம்மாவாக 

அவளது பிறந்த நாளில் வணங்குகிறேன் இறைவனை சுயநலத்துடன்....

திங்கள், 19 நவம்பர், 2012

தமிழினத்தின் தலைமகன்....


தவமாய் தவமிருந்து  
எம் தமிழ்த்தாய் 
பெற்றெடுத்த
தமிழினத்தின் தலைமகன்....

மழைக்கு பின் மாதமாய் 
பனிக்கு முன்  மாதமாய் 
திகழும் கார்த்திகையாம் 
எம் தலைவன் பிறந்தான் ஒளியாய்,,,
இனம் காக்க அவனே வந்தான் புலியாய்...

இன உணர்வை உயிரில் கலந்தான்
உயிரை துச்சமென துயில் களைந்தான்..
செத்து  செத்து சாவை சலிப்படைய செய்தான்...
எதிர்த்தவனை எமனிடம் நட்புற செய்தான்...
நேர் நின்று எதிர்க்க இல்லாமல் செய்தான்...


இன்று முதல் எம் பதிவுகள் தொடக்கம்,,
அவனை பற்றி 
சிந்தித்தால் இல்லை சிந்தனையில் முடக்கம்...
அகிலத்தின் அத்தனை சரித்திரமும் அவனில் அடக்கம்...

புதன், 31 அக்டோபர், 2012

மரணம் மண்டியிட்டு மன்னிப்பு கேட்ட நாள் .......



நூற்றாண்டில் நிகழ்ந்திடாத அதிசயம் 
இவரது பிறப்பும் இறப்பும் ஒரே தினத்தில்....

இனி இவர் போல பிறக்க இல்லை வாய்ப்பு...
அது தருணத்தில் எமன் செய்த ஏய்ப்பு....

தர்மதேவதையின் தலைமகன் 
இவர் 
அண்டியோர்க்கு அள்ளி 
கொடுத்து சிவந்த பொற்கரம்...
ஆங்கிலேயனை அதிர செய்தது 
இவரது  இரும்புக்கரம்....
சாதியில் இல்லை இவருக்கு பேதம்...
தர்மம் மட்டுமே இவர் வாழ்வின் வேதம்...
வங்கத்துக்காரன் ஏற்றுகொண்ட தமையனாய் 
ஆங்கிலக்காரன் அஞ்சி நின்ற சிங்கமாய்....
இவர் சொல்லிய அரசியல் சூசகம்
ஏற்றிருந்தால் இல்லை இன்று யாசகம் .....
தன் தசை நரம்பு எலும்பெல்லாம் 
தேசத்தை கலந்து
குருதியில் உறுதியை குழைத்து 
இறுதி வரை தனக்கென்று வாழா மனிதரை 
வாழையடி வாழையாய் வணங்கி 
நிற்றல் எம்மினத்தின் பெருமையாகும்...

வன்முறை...



நிகழ்ந்ததும் நிகழபோவதும் உணர்த்தும் 
இதன் விளைவை......
ஆரம்பம் சிறு உந்துதலில் - இது 
முன்னறிவிப்பின்றி முடிவுறும்.....
கை கொண்ட செயலை கைவிடும் 
எண்ணம் ஏரிநீர் முதலைக்கு ஒப்பாகும்...
தொட்டு விட்டு விட்டுவிட இயலாது,,
கை கொண்டோர் கரைசேர
கடைநிலை நாட்களும் துணைசேராது,.....
புரட்சிக்கு அடையாளம்
வன்முறை அல்ல...
அறியாதோர் அளவிடப்பட்ட 
வாழ்கைக்கு உட்பட நேரிடும்...
புரியும் வரை நிகழாது மாற்றம்......

வெள்ளி, 26 அக்டோபர், 2012

நம்பிக்கை



புவி ஈர்ப்பு விசைக்கும் 
நம்பிக்கைக்கும் 
இடைக்கொண்டது  
நூலிடை அளவே...
இல்லாதோர்க்கு கண்ட 
மாந்தரெல்லாம் பகையே,,
கொண்டவர்க்கு வரமே வாழ்க்கையாகும்...
தாளிட்ட கதவுகள்...
இடைமறிக்கும் வேலிகள் ....
அளவிட்ட தொகைகள்...
இத்தனைக்கும் அவசியம் 
அவசியமற்று தழைக்கும் மானுடம்...
நம்பிக்கை
இல்லா வாழ்வு தன்னை அழிக்க 
ஆயுதம் வீசும் நிகழ்வாகும்...
நம்பி வாழ நம்பிக்கையிருந்தும் 
நம்பிக்கை கொண்ட வாழ்க்கை 
எம்மில்  இல்லை என்பதே நிதர்சனம்....

புதன், 24 அக்டோபர், 2012

உணர்வு வியாபாரிகள்...


எங்கும் உணர்வின் விளைச்சல் 
எம் தமிழ் நிலத்தில்...
எம் நிலத்தில் நீர் வற்றிய போதும்
எம்மின் 
உணர்வுகள் வற்றியதில்லையே...
ஆதி சொந்தங்கள்  
அனாதையான அந்நேரம் 
உணர்வுகள் தளிர்க்கும்...
ஆழியில் சொந்தங்கள் 
குருவிகளாக்கும் தருணம் செழிக்கும்...
அணைகள் 
அடைத்தாலும் உடைத்தாலும்
சீர்கொண்டு உணர்வு தழைக்கும்...
எம் நில உணர்வுகள் போல 
பிரபஞ்சத்தில் எதுவும் பெரிதில்லை...
ஆயினும் 
முற்றிய எம் உணர்வு பயிரை..
பசிக்கு உணவாய் ,
பிணிக்கு ஔடதமாய் 
எம்தேசம் செழிக்க இல்லாமல்....
தான்தோன்றியாய் எம்முணர்வை...
விற்க வியாபாரிகள் மட்டுமே இங்கு...

வெள்ளி, 19 அக்டோபர், 2012

செவ்வானம்



செவ்வானம் சிவக்க 
ஆதவனும் அந்தியும் கூடும்..
வானம் சிவக்க 
காண்பதெல்லாம்
சிவந்து நிற்கும்....
காணும் கண்களில் 
இல்லை மாற்றம்...
கண்ட
காட்சியிலும்  இல்லை மாற்றம்...
சூழ்நிலை மாற்றமே நிதர்சனம்....
ஏனடா மனிதா...
இதில் இத்தனை விமர்சனம்...
சூழ்நிலைக்கேற்று வாழு...
இனி இல்லை சென்மம் ஏழு...

வியாழன், 18 அக்டோபர், 2012

கலங்குமா சிந்தை,,,



மீளா துயரங்கள் என்னில் 
கொண்ட போதும்
அடுக்கடுக்காய் அவமானங்கள் 
அலங்கரித்த நிலையிலும் 
கலங்குமா எனது சிந்தை..

சிறுநரிகளின் தந்திரத்தால் 
சிந்தனைகள் சிக்கனம் 
கொள்ளும்..
மதிகொண்டு வென்றிட 
நினைத்தால் 
சூழ்நிலைகள் 
வெற்றிடம் கொள்ளும்..
அரிவை தந்த ஆனந்தமும் 
ஆளுமை கொள்ளும்...
நிதி நிலைமை 
நிலை மாற்றம் செய்யும்...
களிப்பும் கலக்கமும்....
எத்தனையோ 
இதில் சிந்தையை 
கலங்க செய்தால் 
என்னவாகுமோ....

திங்கள், 15 அக்டோபர், 2012

நெஞ்சில் தீ




பற்றிய தீ ...
தீராமல் என்றும் நெஞ்சினில் 
எம் இனம் கண்ட தீரா வஞ்சம் 
எவ்வகையில் தாங்கும் நெஞ்சம்....
கொண்ட பகையில் 
நட்பின் கலப்படம்....
கண்ட உறவில் 
சாவின் நிழற்படம்...

அணையுமோ 
நெஞ்சத்தின் பிழம்பு...

அணைகட்டி நிற்கும் சலனங்கள் 
முளைவிட்டு போகும் ஆசைகள்,,,
நிலையற்று போகும் பொய்கள்...

இத்தனையும் நெஞ்சினில் தீயாய்...
அணைவது சாத்தியமா..

எழுதப்படாத தீர்மானங்கள்
எழுதிவைத்த உணர்வற்ற உரிமைகள்..
தகதகக்கும் தனிவற்ற கொள்கைகள்...
நீர் கொண்டு அணைத்திட இயலுமோ...
செந்நீர் காணாமல் அணைந்திடுமோ..

சிதைக்கு வைத்த தீயே  தீயை அணைத்திடும்...
அதுவரை நெஞ்சினில் இருந்திடும்...அணையா தீ....

ஞாயிறு, 14 அக்டோபர், 2012

மறதி...



மனித மூளைக்கு உரித்தான 
முதல் நிலை..
தீதினை முற்பாதி 
நன்றினை பிற்பாதியிலும் 
நிகழச் செய்யும்..
மறதியில் 
கடந்து போனதும் 
மறைந்து போனதும் 
உருச் செய்யும் சுவடுகள் உருக்குலையும்....
இதில் 
செயல்களும் 
மரணங்களும் உட்கொள்ளும்...
தீர்ந்து போகும் மக்கள் மனதில்
நன்றிகளும் தீரா வடுக்களும்...
இதய சுற்றிகரிப்பில் முதலுதவி செய்யும்...
இதமான இணைவிற்கும் 
வஞ்சமில்லா வாழ்வுக்கும்..
மறதி மகத்துவமே !!!


செவ்வாய், 2 அக்டோபர், 2012

நண்பா....


நலமென்று உரைப்பேன் உன் உறவை...
உறவால் கிடைத்த இன்பத்திலும் 
உன் உறவால் கிட்டிய பேரின்பம் பெரிதென்பேன்...
ஆணென்று பெண்ணென்று இல்லை பேதம்...
வாழும் உயிர்களுக்கு நட்பு மட்டுமே வேதம்...
நட்பு...
சில்லென்று வீசும் 
சுள்ளென்று பேசும் 
சிறு தவறிலும் 
உடையாமல் நட்பு கொள்ளடா நண்பா....
நீ இல்லாமல் இயங்காது சூழல்...
உள்ளொன்று வைத்து புறமொன்று 
நினைத்தால் நிலைக்காது,,
அதில் தழைக்காது அழகிய நட்பு...

புதன், 26 செப்டம்பர், 2012

காதல்..

உயிர்கள் உலா வரும் 

உயிரோட்டம்..

இளசுகளுக்கு மட்டும் உறவல்ல 
காதல் .....

உறவுகள் 

அனைத்தும் உணர்வு பெரும் இந்த காதலில்...

ஒளி பெரும் இருள் கூட...

ஒலி தரும் நீரோடை போல...

இனிமை தரும் தனிமைக்கு....

வளமை பெரும் முதுமைக்கு...

எண்ணிலடங்கா ஆசைகள் கூட 

முற்று பெரும் மனித காதலில்...

காதலில்லா வாழ்வு 

கல்லை தின்று செறிவு கொள்ளும் நிலையாகும்...

திங்கள், 3 செப்டம்பர், 2012

திருமணம்...


முடிந்து வைத்த சேலை வேட்டியில் 
துவங்கும் பந்தம்....
பந்தங்களை தொடர சொந்தங்கள் 
கூடும் தருணம்..
தருணங்கள் உருவாகும் புதியதொரு 
உலகிற்கு...
உலகறியும் உன் சுயத்தை இனி
ஈருயிர் கூடுதலில்...
கூடுதலில் உருவாகும் மனதில் 
புதிய சிறு சலனம்...
சலனமே வாழ்கையென்றால்
தோன்றுமே ஊடல்...
ஊடலை வென்றால்  வாழ்கையில் 
கிடைக்கும் தேடல்...
தேடலில் அமையும் உனக்கான  
அருமையான உறவு...
அப்பாற்பட்ட உலகு...
திருமணம்..
புரிதலில் வெற்றி...
இணைவதில் பெற்ற இன்பம் 
இறுதி வரை நிலைக்கும் 
இருவரின் மனதை ஒற்றி...

சனி, 1 செப்டம்பர், 2012

காத்திருப்பு...



வாழ்க்கையின் சுயநிலை விளக்கம் 
அறியும் நேரம் இது....
காத்திருப்பின் காலம் 
வீணானது அல்ல..மூளையின் 
முனையை தட்டி விட்டு செல்லும்...
முடிந்து போனதை சிந்திப்பதை தவிர்க்கும்...
வருவதை எண்ணி சிந்தித்திருக்கும்..
காத்திருப்பின் பின்னணியை 
சூழ்நிலை முடிவெடுக்கும்..
மாணவனுக்கு தேர்வு
காதலர்களுக்கு சேர்வு
மணமானவருக்கு சனன வரவு....
ஒட்டு மொத்த உறவுகளின்
எதிர்பார்ப்பின் உண்மை நிலை 
சீவராசிகளின் பருவ நிலை...
இந்த காத்திருப்பு...

செவ்வாய், 28 ஆகஸ்ட், 2012

விந்தை மனிதா....


முப்படை கண்டு எப்படையையும் 
எதிர் கொண்ட எம் தலைவா
வித்தகங்கள் செய்த விந்தை மனிதா !!

வீழ்த்தி விட்டதாய் எக்காலம் செய்வார்கள்....
வீழ்ந்து போனதாய் பரிகாசம் கொள்வார்கள்...
புலிகளை காட்டில் நரிகள் நர்த்தனமாடும் நேரம் இது....

எச்சில் சோறு தின்று 
பிச்சை கொண்டு வாழ்வதை விட ....
மரணிக்கும் மகத்துவத்தை உணர்த்திய மானிடா ....
எம்மினம் உள்ளவரை நீ இருப்பாய் ...

எம்மை போல சாமானியனுக்கும் 
சத்தம் இல்லாமல் பித்தம் போக்கிவன் நீ...
உனை கண்டே கண் விழித்தேன்...
உனை கண்டே புத்துயிர்  கொண்டேன்...
உன்னாலேயே புத்துணர்வு கண்டேன்....

நீ இல்லாமல் போயிருந்தால் 
இன உணர்வு மட்டுமல்ல...
சுய உணர்வும் மீளாமல் சென்றிருக்கும்...

எம் உணர்ச்சிக்கு உணவு ஊட்டிய 
பச்சை தமிழனே !!
இன்றில்லாவிடிலும் என்றாவது 
உன் இலக்கு கிழக்கில் விடியும்......அச்சமயம் 
சமுத்திரத்தில் சரித்திரம் நிகழும்....



திங்கள், 20 ஆகஸ்ட், 2012

நானா தமிழன் ?



அள்ளிவிட்ட  கட்டுக் கதையில் மயங்கி 
அடங்கா வீரத்தை அறிமையாமையில் முடக்கி,,,
சமீபமாக சரித்திரத்தை மறந்து போன நானா தமிழன் ?
ஏற்றதொரு கருத்தை எடுத்து வந்தால் 
மதத்தால் மறுப்பேன்...
கற்ற கையலவை சாதி கொண்டு சாதிப்பேன்,,,
நான்தான் திராவிடன்
நான்தான் இந்தியன் 
நான்தான் இந்து 
நான்தான் கிறிசுத்துவன்
நான்தான் இசுலாமியன் 
பல வண்ணகொடியில் நான் உள்ளேன்..
பல தலைவர்களின் தொண்டனாய்
கூத்தாடிகளுக்கு ரசிகனாய்...
இலவசத்திற்கு ஏங்கி நிற்கும் பிண்டமாய்..
நிச்சயமாக நிகழ போகும் 
மரணத்திற்கு அஞ்சி நிற்கும் 
என்னில் எங்கே உள்ளான் தமிழன்...
எம்மினத்தின் அடையாளம் எங்கே என்னில்...
செதுக்கி வைத்த சிற்பத்தில் 
மட்டுமே உள்ளான் தமிழன்.. 
நவீன தமிழன் நான்...
எம்மொழியின் 
ஆணிவேரை அடிவரை அசைத்தெடுப்பேன்....
இனி உணர்வாளர்களின் 
உணர்வை இறக்க செய்வேன்....
எம்பிள்ளைகளை அந்நிய மொழியில் 
கலக்க செய்வேன்,,,,
நாளை 
தமிழ் இனமொன்று இருந்ததை 
மாற்று மொழியில் அறிய செய்வேன்,,,,,
இதுவே எனது பிரதானம்....
(ஆதங்கத்தில் நான்.... நானும் எம்மினமும் வேறல்ல )

சனி, 18 ஆகஸ்ட், 2012

சிகரம்....



தடைப் பட்ட நீரும் 
உடைப் பட்ட போதில் 
உருவாகும் 
மின்சாரம்..
அது போலத்தான் நீயும் தோழா..
உணர்ந்தால் சிகரம் உன் வசம்...
சிகரத்தை சிரம் உயர்த்தி கண்டால்...
வென்று விடுவாய் உயரத்தை...
வான் நோக்கி செல்லும் உனது பாதம்...
நிதர்சனமாக ஆகாது சேதம்...
உனக்கே  உரித்தான செருக்கில் 
அளந்து விடு சிகரத்தின் சுற்றளவை...
ஆட்கொள்வாய் அகிலத்தின் பரப்பளவை....
ஒட்டுத் துளி குருதி சொட்டும் வரை தளராதே...
குருதி தீர்ந்து போயினும் உறுதி குறையாதே....
வள்ளுவன் வாக்கு பொய்த்து போகாது...
என்றைக்கும் வீழ்ந்து போகாது 
"தன்னம்பிக்கை".

புதன், 15 ஆகஸ்ட், 2012

சுதந்திர தினம்.....


சுதந்திர தினம்.....
ஒருங்கிணைந்த இந்தியாவை அமைத்து 
வெளியேறிய வெள்ளையனுக்கு நன்றி...
வேற்றுமையில் ஒற்றுமை காண முயன்ற 
எம் தலைவர்களுக்கு நன்றி....

இனி கூற எதுவுமில்லை என்பதே முன்னுரை...
உரைத்து சொல்லுமே அவலங்களை என்னுரை...
சுதந்திரத்தின் சூத்திரம் அறியாமல் 
வேற்றுமையில் ஒற்றுமை காணாமல் 
திக்கெங்கும் கோலாகலம்...
இந்தியன் என்று மதிமயங்கி 
உணர்வை உலையிலிடும் உற்சாகமான தினம் இது...
இன்றோடு முடிந்து போவதா !!
தேசப் பற்று...
எம்மினத்தின் சுதந்திரமே எமது பற்று...
ஆற்றுநீர் முதல் அரசாணை வரை வஞ்சம்...
இதை எவ்வாறு கொண்டாடும் எம் நெஞ்சம்,,,
ஈழம் முதல் மீனவன் வரை இல்லை உத்தரவாதம்..
எப்படி முளைக்காமல் போகும் பயங்கரவாதம்...
எம்மினத்தின் வீழ்ச்சியில் இத்தேசத்தின் எழுச்சியா !!
ஆயினும் உரைக்க உண்டு ஆயிரம் சங்கதி....
உணர்வுள்ள தமிழனுக்கு எம் தமிழ்த்தாயே கதி....
மறவாமல் சுதந்திரத்திற்கு 
விலையாக உயிரை வைத்த எம் தலைவர்களின்
பாதம் தொட்டு நன்றி கூறுகிறேன்...

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

சலனம்....


விட்டெறிந்த கல்லில்
கலங்கிய
ஓடா நீர்  போல சலனம்,,,
சித்தனையும் பித்தனாக்கும்...
மதுவாய்
மாதுவாய்
உறவாய்
பிரிவாய்
சேர்வாய்
சலனம்
உற்றது போல தோன்றும்...
இல்லாதிருக்கும் வரை வரம்பில் இருக்கும் மனது...
எனினும் எதிலும் ஒட்டாமலிருக்கும்..
நிலையானது நிரந்தரமில்லை என ...
மலையான மகத்துவத்தை உணர்த்தும்...
பொய்யான உணர்வுகளுக்கு
சலனம் சட்டென்று உதவும்...
இதற்கு உட்படா  வாழ்வது அரிது..
உட்பட்டு வாழ்தல் மானிடரின் இசைவு....
மொத்த நரம்பு மண்டலமும் அடங்கி 
சலனத்தில் முடங்கி போகும்...
சலனத்தின் முடிவு சங்கடம்...

புதன், 11 ஜூலை, 2012

தன்னிகரில்லா தமிழன்

தன்னிகரில்லா தமிழன்

தயக்கமே தயங்கி நில்....

எதிர் நிற்பது உன் தயக்கமே !!! எதிரியல்ல
வெற்றியும்  தோல்வியும்
நிர்ணயம் செய்வது உன் துணிச்சலை...
உயிருள்ள பொருளை
கொல்லுவதல்ல வெற்றி...
உணர்வற்ற உணர்ச்சியை
வெல்லுவதே வெற்றி...
மரணம் உன்னில் மரணிக்க வேண்டுமே ...
தோல்வி உன்னிடம்
துவண்டு போக வேண்டுமே...
வெற்றி உன்னிடம்
நிலைத்திருக்க வேண்டுமே...
அத்துணைக்கும் நிலையான தீரம் வேண்டுமே....
அதற்கு நீ ....
அச்சத்தை அச்சமுற செய்...
தயக்கத்தை தயங்கி நிற்கசெய்..
இத்துடம் முடிந்து போகும் உன் முடக்கம்...
இனி துவங்குமே எழுச்சியான தொடக்கம்...

அடைக்க படாத சிறை....

கதவுகள் திறந்தும்
வெளிவர முடிவதில்லை,,,,
சுதந்திரம் இருந்தும்
சுற்றிவர இயல்வதில்லை,,,
பெருங்காற்று வீசிய போதும்
சுவாசம் சீரடைய வில்லை..
அன்பென்ற அழகிய ஆயுதம்..
வடு தெரியாமல் வலி தருகிறது...
அன்னையாய் ,தமக்கையாய்..
தோழியாய் ,தோழனாய்..
ரூபத்தில் மாற்றம் கொண்டு தரும்
" அன்பு "
எமை இயங்கவிடாமல் இம்சிக்கிறது...
பற்றற்று வாழ விருப்பம் இருந்தும்
அடைக்கப்படாத சிறையாய் என் சுற்றம்...

வியாழன், 28 ஜூன், 2012

அரங்கு நிறைவு...

திரையரங்கு அல்ல...
நம் வாழ்வரங்கு...
அனைத்துமே நிறைந்தது...
அதீத பற்று...
நிலையா ஆசை...
நடவா கனவுகள்......நம் வாழ்வில் நிறைவுற்று 
அடையா கொள்கை...
அடங்கா உணர்வு..
அணையா வஞ்சம்..
அத்துனையிலும் இல்லை மனிதம் நிறைவு...
நிறைவுகள் நிறைந்த போதிலும் நிறைவில்லை...
குறைவுகளில் தொடங்கும் நிறைவு.......
அதனை உணர்ந்தால் வாழ்வில் மலர்வு...
 

வெள்ளி, 15 ஜூன், 2012

வெறுமை,,,,


இது இன்றியமையாதது
மனித தேவையின் உச்சம்
வாழ்வின் மூலத்தின் மிச்சம்....
கடந்த வந்த தொலைவுகளின் படிவு...
என்றும் இதற்கு இல்லையே முடிவு...
மெய்யை சோதிக்கும்...
ஞானத்தை போதிக்கும்....
மனிதத்தின் மீதியை நிர்ணயிக்கும்,,,
மூளை சங்கமிப்பை பின்னிறுத்தும்....
உள் மனதை கட்டமைக்கும்...
ஆயுளில் முதலும் கடைசியும்
தொடக்கம் வெறுமையுடன்...
நிகழும் வெற்றிடம் உனக்குள்....
இனி நிகழ வேண்டாம் நமக்குள்...

புதன், 13 ஜூன், 2012

வாழ்க்கை...

வாழ தெரிந்தவருக்கு மட்டும்.....
வாடி போவதற்கே பூக்கும்
உணர்வுகளை வேடிக்கைக்கு சூடி கொண்டு...
அணுக்கள் சங்கமித்து
பிடி சாம்பலாய் போகும்
சதைகள் கூடிய உடம்பை போற்றி
வாழுகின்ற !!
நம்பிக்கையில்லா வாழ்க்கையில்
நம்பி வாழ தயக்கம்...
தயக்கத்தில் தொடங்கி மயக்கத்தில்
முடிந்து போகும் - இது
நிச்சயக்கப் படாத பயணம்...
தேவை அதில் நிதர்சனமான கவனம்......
இத்துனைக்கும் காரணம் நீளும் சலனம் !!!
வேண்டியதை பகுத்து...
அச்சத்தை புறத்திலும்
அஞ்சாமை அகத்திலும் வகுத்து...
சுற்றத்தை சுகத்தில் வளர்த்து...
முற்றத்தில் மூட்டைகட்டி வை
உன் அறியாமையை...
ஏற்றத்தில் செல்லும் உன் வாழ்க்கை...
உயிரோடு வாழ்வதல்ல...
உணர்வோடு வாழ்வதே வாழ்க்கை....

சனி, 9 ஜூன், 2012

உன் கைதன்னில் நீ..


உன் கைதன்னில் நீ..
புன்னகைப்பதும் புகழ் பெறுவதும் 
ஆக்கம் செய்வதும் ஆறுதல் கொள்வதும்...
உன்னிடத்தே..
முழுமையுடன் முறுவலித்து
உன்னை நீயே செய்துகொள் சிறப்புடன்,,,
தச்சனும் கொல்லனும் உன்னுள்ளே...
சிந்தித்து சிறப்பை வெளிப்படுத்து...
குறைகளை அப்புறபடுத்து...
உன் கைதன்னில் நீயிருந்தால் 
சிரமும் மணிமுடி தாங்கும்...
மனச்சிறைகளும் சிதிலடையும்.......
மணம்வீசும் பூக்களல்ல நீ !!
அந்தியில் வாடுவதற்கு.....
சீறி வாழும் சிங்கமல்ல நீ !!
ஐந்தறிவில் வாழ்வதற்கு...
தன்னை உணர்ந்து தன்னில் நிறைவு கொள்..
மனிதனாக !!!!!.......