என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 27 பிப்ரவரி, 2013

இந்தியனே கேள்....

எங்களில் சாதியுண்டு 
சண்டையுண்டு 
மதமுண்டு 
மோதலுமுண்டு 
பிரிவினைகள் பலவுண்டு ,
நிச்சயம் சொல்கிறேன் கேள் இந்தியனே !
எங்கள் பிரிவுகள் பாதியிலே தவிர 
ஆதியிலே அல்ல ,,,
தமிழச்சியின் தவப்புதல்வர்கள் 
நாங்கள் தமிழர்கள்....
துண்டாடிக்  கொண்டாடி விடலாம் 
எண்ணிவிடாதே ..
பாரதத்தின் பாதம் நாங்கள் ...
நாங்கள் சற்றே அசைந்தால் 
பாரதம் கவிழும், தேசம் உடையும்...
நிலைகுலைந்து போகும் முன் யோசி...
எங்கள் ஈழத்தில் தமிழ் தேசியக்கீதம் வாசி....


திங்கள், 25 பிப்ரவரி, 2013

மரணத்தை நேசிக்கிறேன்...



ஆழி குளமாகி ஏரி தரிசாகி 
நீரின்றி அமையலாம்  உலகு
அன்றே வீதியெங்கும் பூக்கோலம் 
நாடெங்கும் நர்த்தனங்கள் 
திக்கெட்டிலும் திகழ்ந்திடும் அமைதி....
இருக்கும் இடத்தில் 
இல்லையென்ற விதியை 
கொண்டாடும் உலகம்...
உள்ளமதில் உள்ளதை கூற 
கபடமதை கலந்துரைக்கும்....
பற்றோடு பற்று வைக்க 
ஏமாற்றத்தை பரிசளிக்கும்...
நேசித்து வாழ உயிரற்று போனதே மனிதம்,,,
இனி நேசித்து வாழ நிலையில்லை 
ஆகவே நிலையான 
மரணத்தை மட்டும் நேசிக்கிறேன்...

செவ்வாய், 12 பிப்ரவரி, 2013

படித்து விட்டேன்...


படித்து விட்டேன் எனது முன்னரையை
புதினத்தின் முடிவை நோக்கியே எனது புரட்டல்..
பக்கத்திற்கு ஒரு  கதை மாறும் 
அதில் நாயகன் நான்தானே...
பக்கத்தின் விறுவிறுப்பு 
மூடி வைக்க விருப்பமில்லை
புதினத்தை படித்து முடித்து விட ஆவல்...

எடுத்து விடு தோழனே...

எடுத்து விடு தோழனே
கையில் ஒரு ஆயுதம்....
சித்தம் கலங்கி 
செத்து பிழைப்பதை விட 
கொலைத் தொழில் பழகி விடு...
அடங்கி தவித்து 
அஞ்சி நின்றது போதும்
அச்சம் உனக்கான குணமல்ல...
தோழா நீயும் 
நித்தம் சுற்றம் பாரடா...
இழிவுகள் உன்னை சுற்றி 
விழிகள் திறந்து காணடா...
தண்ணீரும் தடைப் படும் 
அணைகளும் உடைப் படும் 
சொந்தங்களோ குருதிக் கலரியில்..
எத்துனை அவலங்கள் கண்டிடு
உந்தன் பேராற்றல் கொண்டே வென்றிடு....
பெண்பிள்ளைகளை கண்ணென்று காத்திடு...
ஆதலால் தோழா 
ஆயுதம் ஒன்றை தாங்கிடு...

ஞாயிறு, 3 பிப்ரவரி, 2013

எரிமலை சிதறிடும் ....



எனை என்னவோ நினைத்தாய் 
சிறு பொடியனென்று உரைத்தாய் 
அஞ்சிடுவேன் , கூத்தாடி 
கெஞ்சிடுவென் என சிந்தித்தாயோ...
ஆல் போல முளைத்திடுவேன் 
வாழையாய் தளைத்திடுவேன் 
விதையாய் விழுந்திடுவேன்....நான் 
இயற்கையுடன் இயைந்து போனவன்
சீற்றம் கொள்வேன் 
சூழ்நிலையில் மாற்றம் கொள்வேன்....
நிமிர்ந்திட வானம் வரையளவு 
துணிந்திட ஆழம் கடலளவு...
அஞ்சி பிழைத்திட அற்பன் 
நானென நினைவு கொண்டாயோ !!!
அன்றே எரிமலை சிதறிடும் ....

வெள்ளி, 1 பிப்ரவரி, 2013

இதயத்தின் இனிப்பே.......


தமிழே , அமிழ்தே 
உதிரத்தில் உறைந்திட்ட 
உயிரே ; உனை 
நினைந்தால் தொட்ட 
காரியமும் கைதனில்...
இதயத்தின் இனிப்பே
உண்டார்க்கு சுவை ஆறு - அதில் 
உனை கொண்டார்க்கு ஏழு...
நித்தம் மனதில் தேன்சொரியும்...
கண்களில் சித்தம் 
தெளிந்து நீர் வடியும் ...
பிறந்திட்ட இச்சென்மம் 
ஏழேழு பிறவிக்கும் போதும்...
மண்ணுக்கு ஊண் உணவாகினும் 
பெயர் சொல்லும் தமிழனென்று....
எப்பொழுதிலும் உனை சூழும் வஞ்சம் 
திண்ணமே திமிறும் எனது நெஞ்சம்...
சுற்றமும்  சூழ்ச்சி உமை நெரிக்கும்  
எம் கை 'வாள்' அதை முறிக்கும் ...
என்றும் உன்னை சுற்றியே 
என் வாழ்வும் தேடலும் ...