என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

வெள்ளி, 22 ஏப்ரல், 2016

இடர்கள்

பட்டினிகளும்
பகைகளும்
ஒரு சேர
சூழ்ந்து நின்றவன்,

ஒரு கை
சோற்றுக்கலைந்தும்
மறு கையில்
வீம்பை பிடித்து
வாழ்ந்து வந்தவன்,

பரதேசியாய்
திரிந்த பொழுதும்
பரதேசம்
பயணித்தவன்,

அன்பு சகவாசம்
எத்தனை இருந்தும்
ஆயுத சகவாசத்தால்
உயிர் பிழைத்தவன்,

இடர்கள் எத்துணை
இருப்பினும் சரி,

ஒரு பொழுதும்
வீழ்ந்திடும் நிலை வாராது
என்னில் வாழும்
தன்னம்பிக்கை வீழும் வரை...

ஆதவனே !

இரவின் பிணிப்
போக்க பிறை நிலவும்,
இறவா நிலைப்
பெற இவ்வுலகும்,
இரவா நிலைக்
கொள்ள மானுடமும்,
உன்னிடம் யாசித்து
நிற்கும் அக்கினித் தேவனே !
ஆதாரங்கள்
அனைத்துமாய்
அக்கினியை
ஔடதமாய்
ஒளியாய் வீசும் ஆதவனே !
எம்மக்களும் மண்ணும்
பயனுற உன்னிடம்
நானும் யாசித்து நிற்கிறேன்....!

தைத்திங்கள்

எம் உயிர் மொழியே;
திகட்டாத அமிழ்தே;
தித்திக்கும் தேன் தமிழே !
நின் மாதங்கள்
பன்னிரண்டும்
எம் வாழ்க்கைக்கு
தொடக்கம்தான்...
"தைத்திங்கள்"
சித்திரைத் திங்கள்
எதுவாகினும்
நிற்கதி நீயே
என அறிவாயோ....
உன்னை மட்டுமே
அண்டியிருக்கும்
எம்மினத்திற்கு
நிறை வாழ்க்கை
வாழ்ந்திட அருளிடுவாயே
எம் தங்கத் தமிழே...!

சனி, 8 நவம்பர், 2014

அய்யனே



உள்ளமெல்லாம் தேனுருக


நெஞ்சமெல்லாம் பாலாறு


அய்யனே நின் நினைவில்,


நிந்தித்த நெஞ்சமெல்லாம்


நினைவில்லாமல் போக


எனக்கருள்வாய்...!

ஐயனே...!

புத்தியெல்லாம் புரையோடி 
கிடக்கே எம் தேவரே !
சக்தியெல்லாம் மழுங்கி 
போச்சே எம் இராசாதி இராசரே !
சுற்றமெல்லாம் சிதைஞ்சி 
பத்தாயிரம் கால சரிதம் நினைந்து
கண்களுக்குள் ஊற்றேடுக்குதே ஐயனே...!

மாய்வதில்லை

சோர்வுகள் எமை 
ஆட்கொள்கையில்
தீக்குள் விரல் விடுகிறேன்;
வெந்த புண்ணில் 
மாய்வதில்லை துன்பம்;
எனினும் தீயின் வெப்பம்
என்னில் தகிக்கும்..

வியாழன், 12 டிசம்பர், 2013

எம் தேவன் !

பதினாறு பரி 

பூட்டி; முலாமிட்ட


தேரேறி ; நகைத்த


முகம் கொண்டு 


வருவான் 


எம் தேவன் !

காலனையும் அவன்


வடம் பிடிப்பான்;


என்னையும் அவன் 


தடம் பிடிப்பான்; 


என் குலம் காக்க


வந்த எம் அய்யனே ! 


நித்தம் பித்தனாய்


சித்தம் கொள்வேன் !


வாழ்வும் வளமும் 


இனி உன் வசமே தேவா !!!



என் காதல் !

என் மொழி

மீதான காதல் ! 

என் சுயநிலையை 

பதப்படுத்தும்...

என் அவளின்

மீதான காதல் ! 

என் வாழ்நிலையை

மிதப்படுத்தும்... 

இரண்டுமே என்னை 

நிலைப்படுத்தும்.

ஆள நினைக்கிறாயா !

என்னை 

ஆள நினைக்கிறாயா !

அன்பெனும் ஆயுதம் தறித்து வா,

அடக்க நினைக்கிறாயா !

வீரமெனும் வில்லை வளைத்து வா,

எனை ஆள்வதற்கும், 

அடக்குவதற்கும்

வெற்றிக் கொள்வது அவசியம்.

என்னடா வருத்தம் !

சுழியம் முதல்

ஒன்பது வரைதானே

எண்கள்,

அதை சுற்றித்தானே

லட்சங்களும்,

கோடிகளும்.

பிறகு என்னடா !

வருத்தம் உன்னை

சுற்றித்தானே உலகம்,

உன்னையே முன்னும்

பின்னும் திருப்பி

போடு நண்பா !

உன்னையறியும் உலகம்.

செவ்வாய், 12 நவம்பர், 2013

ஒரு பயணத்திற்கான புறப்பாடு...




நீண்ட
நெடுந்தொலைவு
பயணத்திற்கான
புறப்பாட்டுக்கு
தயார் நிலையில்
பயணித்து கொண்டிருந்தேன்
கட்டுச் சோற்றை
நம்பிய பயணமல்ல
இது நடைப் பாதை
வணிகத்திற்கான
பயணம்...
பயணத்தில் சற்றே
களைப்புற்றாலும்
தோல்வி நிலை எட்டி விடக்கூடும்...
கடந்த தொலைவை
கணக்கிட்டு கடக்கும்
தொலைவை கணக்கிட இயலாது...
ஏனெனில் இது
இலக்கில்லாத பயணம்;
நட்பாய் வருவோரும்
துணையாய் தொடர்வோரும்
இங்கு நிலையில்லை;
நிதர்சனமான நிலையில்
சுயநிலை மட்டுமே
என்னில் பயணிக்கும்....

வெள்ளி, 8 நவம்பர், 2013

அச்சம் எதற்கடா...

திரண்டு வா
தமிழா !
மிரண்டு போவான்
எவனும் !
முற்றத்தில்
முடங்கினால்
நிகழாது மாற்றம்,
அச்சத்தில்
ஆர்பரித்தால்
அனாதையாய்
போகுமடா இனம்....
எழுஞாயிரை கைக்
கொண்டு எழுப்பு
பகைவரின் கொட்டத்தை
முடக்கு
இடறொன்று இல்லாமல்
நம்மினத்தை தொடக்கு...
நீதான் நானடா
நான்தான் நீயடா
பின்
அச்சம் எதற்கடா...



சனி, 26 அக்டோபர், 2013

'வேலன், சோழன், ஈழன் '

சிந்திக்கும் 
போதே 
நிந்திக்கும் 
அதுதான் 
சரித்திரம்;
'அன்றோ' 
அதை 
படைத்திட 
நரம்பு 
புடைத்திட 
புசங்கள் 
துடித்திட 
வேல் கொண்டு 
நின்றவனே 
வேலன் ;
வாள் வீசி 
சென்றவனே 
சோழன் ;
துவக்கில் குறி 
வைத்தவனே 
ஈழத்து வீரன் ;
இத்துனையும் 
நீதான்...
'இன்றோ'  
கொட்டடி 
அடிமையாய் 
சோற்றுக்கு 
வாழ்வாயா !
உணர்வு 
கொள்வாயா !
சொல் நீ ....

வியாழன், 24 அக்டோபர், 2013

விலை யாதென கேட்டேன்..

விலை யாதென 
கேட்டேன் 
எப்பொருளுக்கு 
என்றுரைத்தான் 
வியாபாரி 
உள்ள பொருள் 
அத்துனையும் என்றேன்;
உற்றத் தொகை 
உள்ளதா சந்தேகித்தான்
உள்ளத் தொகையை 
சரிபார்த்து உண்டென்று 
சொன்னேன்..
வியாபாரி வியாபாரம் 
உனக்கில்லை என்றே 
நடைக் கட்டினான்....
அவனே இறைவன்
நானே மனிதன்....