என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 22 மே, 2013

இனம் வாழ....


எம் தேசத்து 
ஆற்றங்கரைகள் போலவே 
எம்மக்களும் காய்ந்த 
நிலையிலே..
படுகையின் பள்ளங்களில் 
தேங்கும் நீரும் 
நதிகளில் காணமல் 
போனதே....
அழிவில் 
முதற்கண்  மொழி 
வழிமொழியும்  இனம்  
பின் தொடரும் இயற்கை...
வீழ்வதற்கு ஒன்றுமில்லை
இனி எழுவதற்கு 
வானம் மட்டுமே எல்லை...
மொழி வாழ யாழ் மீட்டு 
இனம் வாழ வாள் தீட்டு 
நிலம் வாழ ஏர் பூட்டு...
சிந்தையில் செய்வதறியா
நிலைக் கொண்டால் ! எம்மினமே 
சத்தமில்லாமல் மடிந்து போவாய்...
நிலைமாறும் முன் நிலைமாறு...



செவ்வாய், 14 மே, 2013

எதிர்த்து நில் ...

இமை மூடி 
இருள் கூடி 
வழி தேடி 
மனம் வாடி 
வாழும் தோழா உணர்வாயா 
உன் உள்நிலையை...!
அடங்கிடாத அரிமாவும் 
அணைந்திடாத தணலும் 
உன் வசம் ,
உனையன்றி இனி எவர் வசம்...
எழுந்து நில் 
துணிந்து நில் 
எதிர்த்து நில் 
எதிர்த்தது காலன் எனினும்..
உயிர் நிலை கண்டு 
அச்சம் எதற்கு -அது 
துச்சம் நமக்கு...
வீழ்ந்தது போதும் 
வீரியம் கொண்டு எழு
இனி ஏற்றமே...

திங்கள், 6 மே, 2013

வாழையடி வாழையாய் ....


வாழையடி வாழையாய் 
தளைத்த எம் தமிழினம் 
இன்று சாதிகளாலும் 
மதங்களாலும் 
கருகிய நிலையில் 
அரசியல் அரிவாளால்
வெட்டு பட்டு போனதே...
கொத்து கொத்தாய் 
குலை குலையாய் 
கூட்டம் கூட்டாமாய் 
செழித்த எம்மினம் 
தன்னந்தனி ஆனதே...
வீழ்ந்து விட்ட விதையில் 
சொட்டுநீர் பட்டு விடாதா !
இனியொரு நிகழ்வில் 
அதிசயம் நிகழ்ந்திடாதா !
"இனியொரு விதி செய்வோம்"
என்றிட்ட எம் நாட்டு புலவன் 
வாக்கு பலித்திடாதா !
கன்றுகளோடு வாழை தளைத்திடாதா !
ஏக்கத்துடன் நடை பயில்கிறேன் 
எம் தமிழ் தோட்டத்தில்...










சனி, 4 மே, 2013

தோட்டாக்களில் தோற்றம் மாறியவன்.



ஆணையிட்ட மன்னனுக்கு 
யானை மீதேறி போரிட்ட தமிழனவன்...
காலாட்படையில் வேல் தாங்கி
இமயத்திலும் புலிக்கொடி ஏந்தியவன்
முகலாயனை குலைநடுங்க
செய்திட்ட சோழ மைந்தனவன்
கால மாற்றத்தில் உருக்குலைந்த 
எம்மினத்தின் அடையாளம் 
வாழும் வேலும்..
மாய்ந்த விலாசத்தை 
மீட்டெடுத்தான் ஈழத்தின் சோழன் 
வாளுக்கு துவக்கு கையில் 
வேலுக்கு இவன் வேலுக்கு பிள்ளை 
தமிழனும் அவனும் வேறேதும் இல்லை 
இவன் தோட்டக்களில் தோற்றம் மாறியவன்...
ஆயுதம் மாறியதே அன்றி இலக்கு அல்ல
ஆதியிலும் சரி மீதியிலும் சரி 
வீரமே எம் இனத்தின் அடையாளம்
போரும் ஏறும் மட்டுமே எனது குலத்தொழில்..