என் எழுத்துக்கள் "கவிதைகள்" என்று கூறும் எண்ணம் என்னிடம் இல்லை "படைப்புகள்" என்றுரைத்து என்னில் நிறைவு கொள்ள விருப்பமில்லை, இது வெறும் வார்த்தைகளின் கூட்டமைப்பே ! சொற்களை சேகரித்து ஒன்றிணைத்த பணி அவ்வளவே ! இதில் முற்று பெறாத நிலைகள் நிறைய உண்டு ஏனெனில் நான் அறிவில் மிகச் சிறியவன் கடுகு போல......

புதன், 11 ஜூலை, 2012

தன்னிகரில்லா தமிழன்

தன்னிகரில்லா தமிழன்

தயக்கமே தயங்கி நில்....

எதிர் நிற்பது உன் தயக்கமே !!! எதிரியல்ல
வெற்றியும்  தோல்வியும்
நிர்ணயம் செய்வது உன் துணிச்சலை...
உயிருள்ள பொருளை
கொல்லுவதல்ல வெற்றி...
உணர்வற்ற உணர்ச்சியை
வெல்லுவதே வெற்றி...
மரணம் உன்னில் மரணிக்க வேண்டுமே ...
தோல்வி உன்னிடம்
துவண்டு போக வேண்டுமே...
வெற்றி உன்னிடம்
நிலைத்திருக்க வேண்டுமே...
அத்துணைக்கும் நிலையான தீரம் வேண்டுமே....
அதற்கு நீ ....
அச்சத்தை அச்சமுற செய்...
தயக்கத்தை தயங்கி நிற்கசெய்..
இத்துடம் முடிந்து போகும் உன் முடக்கம்...
இனி துவங்குமே எழுச்சியான தொடக்கம்...

அடைக்க படாத சிறை....

கதவுகள் திறந்தும்
வெளிவர முடிவதில்லை,,,,
சுதந்திரம் இருந்தும்
சுற்றிவர இயல்வதில்லை,,,
பெருங்காற்று வீசிய போதும்
சுவாசம் சீரடைய வில்லை..
அன்பென்ற அழகிய ஆயுதம்..
வடு தெரியாமல் வலி தருகிறது...
அன்னையாய் ,தமக்கையாய்..
தோழியாய் ,தோழனாய்..
ரூபத்தில் மாற்றம் கொண்டு தரும்
" அன்பு "
எமை இயங்கவிடாமல் இம்சிக்கிறது...
பற்றற்று வாழ விருப்பம் இருந்தும்
அடைக்கப்படாத சிறையாய் என் சுற்றம்...